கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன்

கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன்

கொசுவின் ஆற்றலை நாம் மதிப்பிட முடியாவிட்டாலும் அது ஒரு பறக்கும் பூச்சி இணம் என்று மட்டுமே அறிந்து வந்த நமக்கு. கொசுவின் முதுகில் இன்னொரு உயிர் இணம் வாழ்கிறது. அது எதற்க்காக கொசுவின் மேல் உள்ளது என்று அறிய முடிய வில்லை என்று மானவர்களுக்கு பாடம் எடுத்தார்

அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?

إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا 

நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)

இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? 

இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான். அல்பகரா :2:26

மேலும். அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மேலும். மேற்கொண்டு படியுங்கள்.

ஒரு கொசு

1. அது பெண்பால்.

2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.

3. அதன் வாயில் 48 பற்கள்.

4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.

5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.

6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்

7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.

8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது..

9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.

10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அதனைப் படைத்தவன் அதற்கு கொடுத்து இருக்கிறான்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்க முடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.

கொசுவின் முதுகில் அப்படி என்னதான் அந்த பூச்சி செய்து கொண்டு இருக்கிறது. ஒரு கிருமி முதுகு எலும்பு உயிரினங்கள் மீது ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்த அதற்கு எதவது ஒரு உயிரிணத்தின் துணை தேவை படுகிறது. அவ்வாறு கொசுவின் மேல் உட்காற்ந்து கொசு நமது உடலில் வந்து கடிக்கும் போது அதன் வழியாக கிருமி உடலில் நுழைந்து சிகப்பு அணுக்களில் ஊடுருவும் அப்படி ஊடுவிய கிருமி சிகப்பு அனுக்களில் தஞ்சம் அடையும். அங்கு இணப் பெருக்கத்தை உண்டு பண்ணிய பிறகு மீண்டும் வந்து இரத்தத்தில் கலக்கும் இரத்தத்தில் கலந்த கிருமி கல்லீரலை தாக்கும்.

கேமிட்டோசைடுகள் கொசுக்களுள் கேமீட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இவை ஒருங்கிணைந்து சைகோட் (Zygote) என்னும் கருமுட்டை உருவாகின்றது. இவை நகரும் தன்மையுடையதால், நகரும் கருமுட்டை (ookinetes) எனப்படுகின்றன. இரைப்பையின் சுவரைத் துளைத்துக் வெளிவரும் கருமுட்டை, தொடருந்து பிளந்து பல நுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோயிட்டுகளாக உருமாறுகின்றி, கொசுவின் உமிழ் நீர் மூலம் மீண்டும் முதுகெலும்பியின் இரத்ததில் கலக்கின்றன.

கிருமிகளின் தாக்கத்திற்கு ஒப்ப அது மலேரியாவாகவோ டெங்க்காவோ பிலேக்காவோ உருவெடுக்கும். இப்போது மீண்டும் படியுங்கள். கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)

மீரோசோயிட்டுகள் சிவப்பணுக்களிலிருந்து வெளியேறும் பொழுது இரத்ததில் கலக்கும் நச்சுப் பொருட்களே மலேரியா காய்ச்சலுக்குக் காரணமாகும்.

பிளாஸ்மோடியம் (கொசுவின் மேல் உள்ள ஒரு உயிரி)

பிளாஸ்மோடியம் புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். இந்த இனத்தைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் மலேரியா நோய்க்குக் காரணமானவை. இவை மனிதர்களைத்தவிர, பறவைகள், ஊர்வன மற்றும் எலிகளையும் பாதிக்கின்றன.

இவ்வுயிரி ஓர் அகச்செல் இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கைச் சுழற்ச்சிக்கென ஓர் முதுகெலும்பியும், இரத்தம் உறிஞ்சும் கொசுக்களும் தேவைப்படுகின்றன. 1898ஆம் ஆண்டு ரொனால்ட் ராஸ் என்பவர் Culex கொசுக்களில் பிளாஸ்மோடியம் உள்ளதை நிரூபித்தார். இதற்காக அவருக்கு 1902ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Giovanni Battista Grassi என்ற இத்தாலிய பேராசிரியர் அனபிலஸ் கொசுக்கள் மட்டுமே மனிதர்களிடையே மலேரியா நோயைப் பரப்பவல்லது என கண்டறிந்தார்.

பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை வட்டத்தில், மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாகவும், கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகளாகவும் செயல்படுகின்றன.

பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் உமிழ் நீர் வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுக்கள் இரத்ததில் கலக்கின்றன. பின்பு, கல்லீரலின் உட்புறமுள்ள ரெட்டிகுலோ எண்டோதீலியல் (reticuloendothelial) செல்களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது.

கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.

சிவப்பணுக்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக (gametocyte) உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன.

அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் கொசுவின் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

கொசுவிற்க்கு நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். பிளாஸ்மோடியம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்.

அட்டவணை படம் கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும்,

படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம்!

One thought on “கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன்

  1. நண்பா கொசுவின் நுகர்தல் தன்மை 60 மீட்டர் பதிலாக 60. கிமி போட்டுருக்கீங்களே முடிஞ்சா திருத்திடுங்க In shaa allah

Add Comment