​​ ​உலகில் பயன்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த 10 மொழிகள்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக
Top 10 Oldest Lanquages in the World - Farhan Online உலகில் ஏறத்தாழ 6000 மொழிகள் தொடக்கம் 7000 மொழிகள் வரை இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு மொழி காலப்போக்கில் மாற்றம் பெற்று கிளைமொழிகளாகப் பிரிகின்றது. இத்தகைய மொழிகள் ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என அழைக்கப்படுகின்றன. இன்றைய உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகள் இந்தோ-ஐரோப்பிய, சீன-திபெத்திய குடும்பங்களைச் சேர்ந்தவை  தற்போது பேசப்படும் மொழிகளில் பல இந்நூற்றாண்டுக்குள் அழியும் நிலையில் உள்ளன என்று  Encyclopedia வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் உலகில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மொழிகளில் மிகப் பழமையான மொழிகளை பல இணையதளங்களின் உதவியை கொண்டு நான் உங்களுக்கு இங்கு பட்டியலிட்டு கீழே பதிவு செய்து உள்ளேன நீங்களும் பார்த்து விட்டு உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. Latin (இலத்தீன்) (BC 6th Century )
சுமாராக கி.மு 6 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி, வத்திக்கானின் ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

09 Armenian (அருமேனிய மொழி) (BC 5th Century )

சுமாராக கி.மு 5 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , ஆர்மீனிய குடியரசு மற்றும் Nagorno-Karabakh Republic ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

08 Korean (கொரிய மொழி) (BC 6th Century )

சுமாராக கி.மு 6 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , வட கொரிய , தென் கொரிய மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

07 Hebrew  (எபிரேய மொழி) (BC 10th Century )

சுமாராக கி.மு 10 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , இசுரேல்  இல் ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

06 Aramaic (அரமேயம்) (BC 9th Century )

சுமாராக கி.மு 9 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , Iraq , Iran , Syria , Israel , Lebanon ஆகிய நாடுகளில் Aramaic மொழி பயன்படுதுபாவர்கள் உள்ளார்கள்.

05 Chinese (சீன மொழி) (BC 12th Century )

சுமாராக கி.மு 12 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , சீனா ,  தாய்வான் , சிங்கப்பூர்  மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

04 Greek (கிரேக்க மொழி) (BC 14th Century )

சுமாராக கி.மு 14 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , கிரேக்கம் , சைப்பிரசு , ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

03 Egyptian ( எகிப்திய மொழி) (BC 26-20th Century )

சுமாராக கி.மு 26-20 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து  எகிப்த் இல் கீ.பி 17 ம் நூற்றாண்டு வரை பேசப் பட்ட மொழி.

02 Sanskrit (சமசுகிருதம்) (BC 30th Century )

சுமாராக கி.மு 30 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , இந்தியாவில் சில மாநிலங்களில்  ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

01 Tamil (தமிழ் ) (BC 50th Century )
சுமாராக கி.மு 50 ம் நூற்றாண்டு காலப் பகுதியில் இருந்து இன்று வரை  பயன்பாட்டில் உள்ள மொழி , இலங்கை , சிங்கபூர் , இந்தியாவில் தமிழ் நாட்டில்  ஆட்சி மொழியாக பயன்பாட்டில் உள்ளது.

குறிப்பு : பல இணையதளங்களில் இருந்து பெறப்பற்ற தகவல்கலை கொண்டு இப் பதிவு, பதிவு செயப்பட்டுள்ளது ஏதாவது தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் நன்றி.

Add Comment